சனி, 22 டிசம்பர், 2012

தமிழ்க் கணிதமேதையை நாம் மறந்தாலும் 'கூகிள் Google' மறக்கவில்லை..

1887ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி, ஈரோட்டில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரீனிவாச ராமானுஜர். தனது 12வது வயதில் கணிதத்தில் திடீர் ஆர்வம் ஏற்பட்டு, கணித நூல்களை தேடித்தேடி படித்தார். விடை காண முடியாத 6 ஆயிரம் தேற்றங்களை நிரூபிக்க முயற்சியெடுத்தார்.

அப்போது மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்டில் ராமானுஜருக்கு சிறிய வேலை ஒன்று கிடைத்தது. துறைமுகத் தலைவரும்,மேனேஜரும் ஒரு முறை ராமானுஜரின் கணிதத் திறமையை அறிந்து கொள்ள முடிந்தது. இவரது முயற்சிகளைக் கவனித்துக் கொண்டிருந்த மேனேஜர் எஸ்.என்.அய்யர், ராமானுஜம் தயாரித்த சில முக்கிய தேற்றங்களையும், நிரூபணங்களையும் இங்கிலாந்துக்கு அனுப்ப ஊக்குவித்தார். அவ்வாறு முதலில் அனுப்பி வைத்தமைக்கு ஒருவித பதிலும் இல்லை.

1913ம் ஆண்டு ராமானுஜர் கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஹார்டி என்பவருக்கு அனுப்பி வைத்தவை, இவரை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. அந்த கணித இணைப்புகளை கண்ட உடனேயே ஹார்டி, இது ஒரு சாதாரண மனிதரது அல்ல, ஒரு மேதையின் படைப்பு என்பதை புரிந்து கொண்டு, ராமானுஜரை உடனேயே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு வர அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்று 1914ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற ராமானுஜத்தின் திறமை சில நாட்களிலேயே கணித மேதைகளால் போற்றப்பட்டது.

உணவு பிரச்னை, வீட்டு நினைவு ஆகிய காரணங்களால் இங்கிலாந்து வாழ்க்கை அவருக்கு ஒத்து வரவில்லை. உடல் நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு 1917ம் ஆண்டு கப்பலில் இந்தியா புறப்பட்டார். மெட்ராஸ் வந்த பிறகும் படுக்கையிலேயே இருந்த ராமானுஜர் 1920ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காலமானார்.

ராமானுஜர் தனது திறமைக்கு காரணம் குல தெய்வமான நாமகிரித் தாயார்தான் என்று தெரிவித்துள்ளார். மேலும், "கடவுளின் அமைப்பைத் தெரிவிக்கவில்லையெனில், எனக்கு ஒரு தேற்றமும் பொருளுள்ளதாகத் தெரிவதில்லை'', என்றார். ராமானுஜரின் உருவச்சிலை துறைமுக வளாகத்தில், இவரது நினைவாக வைக்கப்பட்டுள்ளது

நன்றி:
புவி

வியாழன், 20 டிசம்பர், 2012

வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு -- மருத்துவ டிப்ஸ் !!!


வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு

இரவு உறங்கச் செல்லும் முன் சூடான பசும்பாலில் இரண்டு பூண்டுப் பற்களைப் போட்டு, அதை உண்டால் உடலுக்கு அதைவிட நலம் சேர்க்கும் விஷயம் வேறு இல்லை.'' - பிரபல மருத்துவர்கள் சொன்ன குறிப்பு அல்ல இது. நல்லது கெட்டதுகளின் அனுபவ சாட்சியாய் வாழ்ந்து மறைந்த கவிஞர் கண்ணதாசன் 'அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலில் எழுதி இருக்கும் குறிப்பு இது. 'பூண்டு கைவசம் இருந்தாப் போருக்கே கிளம்பலாம்’ என்பார்கள் கிராமப்புறங்களில். தன் உடல் செரிமானம், சக்தி, கழிவு நீக்கம் என சகலத்திலும் உடலுக்கு உற்ற துணை புரியும் பூண்டு, மருத்துவ உலகின் வரப்பிரசாதம். சைவம், அசைவம் என எல்லா வகை உணவிலும் பூண்டு தவிர்க்க முடியாதது. பூண்டின் மகத்துவத்தைப் பற்றியும், நோய்களைக் குணப்படுத்த அதைப் பயன்படுத்தும் முறைகள் பற்றியும் விவரிக்கிறார் காரைக்குடி சித்த மருத்துவ மைய சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம்.

''பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவற்றை நீக்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது.

இருமல், மூச்சுத்திணறல், மலக் கிருமிகளினால் ஏற்படும் தொற்று போன்ற பிரச்னைகள் உள்ள 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெள்ளைப் பூண்டினை அரைத்து மிகவும் சிறிது அவர்களது நாக்கில் தடவினாலே போதும். நிவாரணம் கிடைக்கும்.
தலையில் பூச்சிவெட்டு ஏற்பட்டுக் கொத்துக்கொத்தாக முடி உதிர்வதைத் தடுக்கப் பூண்டுத்தோல் 50 கிராம் எடுத்து தேங்காய் எண்ணெயில் நன்கு வறுத்து, அதை அரைத்து, மறுபடியும் அதே எண்ணெயில் மைபோலக் கலந்து, பூச்சிவெட்டு உள்ள இடத்தில தடவிவர வேண்டும்.

5 பூண்டுப் பற்கள் எடுத்துத் தோல்நீக்கி 100 மில்லி பசும்பாலில் போட்டு வேக வைக்கவேண்டும். நன்றாக வெந்த பின்பு பூண்டைக் கடைந்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மார்புவலி, மூச்சு அடைப்பு சரியாகும்.

பூண்டுக் கஞ்சி சாப்பிடுவது கிராமத்து வழக்கம். தேவையான அளவு பூண்டினை எடுத்துத் தோல்நீக்கி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை முறையே 50 கிராம் சேர்த்து அரைத்து, தூள் செய்து, அரை லிட்டர் பசும்பால் விட்டு வேகவைத்து, வற்றும் சமயத்தில் அதில் பனங்கற்கண்டைச் சேர்க்க வேண்டும். மாதம் இருமுறை பூண்டுக் கஞ்சி சாப்பிட்டால் ரத்தசோகை மாறி உடல் வலிமை பெறும்.

பூண்டுக் கஞ்சியுடன் ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்களின் வீரியக்குறைவு சரியாகும். மேலும் மலச்சிக்கல், சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் ஆகியவையும் சரியாகும்.
10 வயதுக்கு உட்பட்டவர்கள் தினமும் 2 பூண்டுப் பற்களும், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 3 பூண்டுப் பற்களும், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தினமும் 5 பூண்டுப் பற்களும் பனங்கற்கண்டுடன் சேர்த்து உண்டு வர உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை குணமாகும்.

உயர் ரத்த அழுத்தம், ரத்த உறைவு, சீரற்ற ரத்த ஓட்டம் ஆகியவற்றுக்குப் பூண்டு நல்ல பலன் தரும். பூண்டுப் பல் 5 எடுத்து அத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, அரைத்துத் தூள் செய்து, பால் கலந்து உண்டுவர ரத்த ஓட்டம் சரியாகும்.
வாதநோய்கள் (பக்கவாதம், மூட்டுவாதம், சுண்டுவாதம், நடுக்குவாதம், ஒருபக்க வாதம்) குணப்படுத்தவும் பூண்டு சிறந்த மருந்து.

விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், புங்க எண்ணெய், புன்னை எண்ணெய் (புன்னை மர எண்ணெய்), இலுப்பெண்ணெய் ஆகியவற்றை 100 மில்லி எடுத்து ஒன்றாகக் கலந்து அத்துடன் தேவையான அளவு தழுதாளை இலை, நொச்சி இலை ஆகியவற்றைப் பூண்டின் சாறுவிட்டு அரைத்து, அதையும் எண்ணெயில் கலக்க வேண்டும். எண்ணெயை நன்கு கொதிக்க வைத்து ஆறவிட்டு வாதம் உள்ள இடத்தில் தடவி வர மேற்கூறிய வாதங்கள் சரியாகும்.'' எனச் சொல்லும் சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம் இறுதியாக இப்படிச் சொல்கிறார்.

''அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பூண்டுக்கும் பொருந்தும் !''

நன்றி
பரமக்குடி சுமதி

புதன், 19 டிசம்பர், 2012

சிவலிங்க தத்துவம்


கண்களால் காணக்கூடிய உருவம், காணமுடியாத அருவம் என்ற இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட அருவுருவத்தன்மையையே சிவலிங்கத் தோற்றம் உணர்த்துகிறது. பரம்பொருளானவர் ஜோதி வடிவில் நிர்குண நிராகாரமாகவும், சகுணமாய், ரூபத்துடனும் உள்ளார் என்பதையே சிவலிங்க வடிவம் உணர்த்துகிறது.

லிங்கம் என்பதற்கு அடையாளம் என்று பொருள் உண்டு. அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாலும் லிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் சிவலிங்கத்திற் குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருஷ்டி தொடங்கும் போது சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன.

தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் உருவம் உணர்த்துகிறது. லிங்க உருவில் பாகமாக ஆதாரமும் விஷ்ணு பாகமாக ஆவுடையாரும், ருத்ர பாகமாக பாணமும் விளங்குகின்றன.

இதன் மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மனிதகுல நம்பிக்கைக்குரிய மூன்று செயல்களையும் மேற்கொள்ளக்கூடிய கடவுள்களின் உருவமும் அடங்கியிருப்பதை உணர்கிறோம். இந்தப் பிரமாண்டமே லிங்க வடிவமாக உள்ளது ருத்ரம்.

சிவனடியார்கள், பக்தர்களின் விழிகளுக்கு பரமேஸ்வரனின் தோற்றம் பரபிரும்ம வடிவமாய், பிரம்மாண்டத்தின் அடையாளமாய், அனைத்தையும் ஒடுக்கிக் கொள்ளும் ஆதாரமாய், அன்பே வடிவான சிவமாய் தெரிகிறது. எனவே சிவலிங்க உருவத்தை பற்றி சொல்வோர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். அவரவர் இயல்புக்குத் தக்கபடி அனுமானிக்கட்டும்.

நடராஜரது நடன தத்துவம்

ஊனும் உயிரும் உணர்வும்போல் உள்ளும் புறத்தும் இயங்குகின்றான் இறைவன். அணுவிற்குள் அணுவாக நின்று ஆடுகிறான்; அணுவிற்கு வெளியே இருந்து அதனை ஆட்டுகிறான். அணுவின் ஊனாக இருந்து உடலைத் தாங்குகிறான்.

கயிறு இல்லாமலேயே, இந்த அண்ட பம்பரங்களை ஆட்டத் தெரிந்தவன் அவன். ஆட்டுவிக்கின்றவனும் ஆடிக்கொண்டேதான் ஆட்டுகிறான். அவன் ஆடிக்கொண்டே ஆட்டினால்தான் அண்டங்கள் ஆடும்.

ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றுமில்லாத அந்த இறைவனை ஆடும் பெருமானாக- நடராஜனாக உருவகப்படுத்தி இருக்கிறார்கள்.

மந்திரம் பாடிய திருமூலர், சங்கப்புலவர் கபிலர், நக்கீரர், சமய முனிவர்களான சம்பந்தர், அப்பர், மணிவாசகர், தெய்வக் கவிஞர்களான வள்ளுவர், கம்பர், சேக்கிழார், பரஞ்சோதி முனிவர் முதலானோர் எல்லாம் நடராஜப் பெருமானை பாடிப் பாடித் துதித்திருக்கிறார்கள். அப்படிப் பாடித் துதிப்பதற்குரியவனாயிருந்த பெருமானின் பெருவிழாக்களில் ஒன்று திருவாதிரை.

நட்சத்திரங்கள் இருபத்தேழில் "திரு' என்ற அடைமொழியுடன் இரண்டு நட்சத்திரங்களே உள்ளன. அவை திருவாதிரை, திருவோணம் என்பன.

திருவாதிரை சிவபெருமானுக்கு உகந்த நாள்; திருவோணம் திருமாலுக்கு சிறந்த நாள். "மாதங்களுள் மார்கழியாக இருக்கிறேன்' என்று கூறுகிறான் கண்ணன். இந்த மாதமே தேவர்கள் நாளில் வைகறைப் பொழுதாகக் கருதப்படுகிறது.

அத்தகைய மார்கழி மாதத்தில், பௌர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் கூடிய நாள் திருவாதிரைத் திருவிழாவிற்குரிய நாள்.

திருமுறைகளில் பல இடங்களில் "ஆதிரையன்' என்று சிவபெருமானைப் பற்றி சொல்லப்படுகிறது. திருஞான சம்பந்தப் பெருமான் பூம்பாவைப் பதிகத்தில், "கார்திருசோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான் ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்' என்று பாடிப் புகழ்ந்திருக்கிறார்.

திருவாதிரை விழா பொதுவாக விநாயகப் பெருமானுக்கும், சிறப்பாக நடராஜப் பெருமானுக்கும் நடைபெறுகிறது. சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரையன்று திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அத்திருநாளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தென்னாட்டுச் சிவனை- கூத்தப் பெருமானைக்கண்டு வழிபடுகின்றனர். குனித்த புருவத்தையும் குமிண் சிரிப்பையும் விரித்த சடையையும் பவளமேனியையும் எடுத்த பொற்பாதத்தையும் கண்டு களிக்கின்றனர்.

இறைவன் உமையம்மை காணத் திருக்கூத்து இயற்றும் காரணத்தால்தான் இவ்வண்ட சராசரங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. உலகில் அறிவுள்ள பொருட்கள் வினைப்போகம் துய்க்கின்றன. அவற்றிற்கு அறிவில்லாப் பொருட்கள் பயன்படுகின்றன. இதுவே எம்பெருமான் செய்யும் ஊன் நாடகம்.

நிலையற்ற உலகின்பங்களினின்றும் நிலைத்த பேரின்பத்தைக் கொடுப்பது இறைவன் திருவடிச் சார்பென்று உயிர்கள் உணர்ந்து நிற்கும் தன்மையைக் காட்டுவது ஞான நாடகம். இதை மணிவாசகப் பெருமான்,

"ஊன் நாடகம் ஆட்டு வித்தவா
உருகி நான் உனைப் பருக வைத்தவா
ஞான நாடகம் ஆட்டுவித்தவா'

என்று விளங்க வைத்திருக்கிறார்.

தில்லைக் கூத்தனின் திரு நடனம் ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐம்பெரும் தொழில்களைக் குறிக்கும்.

கூத்தபிரானின் திருவுருவ அமைப்பானது சைவ சித்தாந்தக் கருத்துகளைத் தன்னுள்ளே அடக்கி அவற்றின் அறிகுறியாக நிற்கின்றது என ஆன்றோர் கூறுவர்.

தில்லைக் கூத்தனின் திருவுருவப் பேரழகைக் கண்டு பேருவகை கொண்ட அப்பரடிகள், "மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே' என்று கூறுகிறார். எனவே மக்களாய்ப் பிறந்த பயன் எய்த வேண்டுபவர், ஆண்டவனின் தாண்டவத்தைக் காண்பது அவசியம். அதுவும் மார்கழி மாத திருவாதிரையன்று பார்ப்பது மிகவும் சிறந்தது.

மார்கழி மாதத்தில் திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு ஆலயங்களில் திருவிழா நடைபெறுகின்றது. முதல் ஒன்பது நாட்களிலும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜை செய்வித்து திருவீதி எழுந்தருளச் செய்ய வேண்டியது முறை.கோவிலின் எட்டுத் திக்குகளிலும் திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவை முதல் எட்டுப் பாடல்களையும் பாடச் செய்து, கோவிலுக்குள் மற்ற பன்னிரண்டு பாடல்களையும் பாட வேண்டும். எட்டுத் திக்கிலுமுள்ள வாமை, சேட்டை, ரௌத்திரி, காளி, பலவிகரணி, கலவிகரணி, பலப்பிரமதனி, சருவபூததமனி ஆகிய எட்டு சக்திகளை ஒன்பதாம் சக்தியாகிய மனோன்மணி எழுப்பி இறைவனிடம் சேர்ப்பிப்பதை இது குறிக்கிறது.

நடராஜப் பெருமானுக்கு நிகழ்த்தும் அபிஷேக ஆராதனைகளிலும் ஐந்தொழில் முறை அமைந்திருப்பதாக ஆன்றோர் கூறுவர். பெருமானைப் பீடத்தை விட்டு எழுந்தருளப் பண்ணுதல் தோற்றம்; திருமுழுக்கு முதலியன திதி; கறுப்புச் சாந்து அணிதல் சங்காரம்; வெள்ளை ஆடை சாற்றல் திரோபவம்; உற்சவம் கொண்டருளல் அநுக்கிரகம்.

அந்த திருவாதிரை நாளில் இறைவனுக்குக் "களி' நிவேதனம் செய்வது வழக்கம். இதைப் பற்றிய வரலாறு ஒன்றுண்டு. திருவிசைப்பா பாடிய சேந்தனாரின் அன்பின் திறத்தை இவ்வுலகத்திற்கு  அறிவிக்கத் திருவுளம் கொண்டார் ஆண்டவன். அவ்வடியார் நிவேதித்த களியினை சிதம்பரம் கோவில் முழுவதும் சிதறவைத்து மணங்கமழச் செய்தார்.

மெய்யன்பர்கள் இதன் கருத்து தெரியாது திகைத்தனர். அப்போது இறைவன் "சேந்தனார்படைத்த களியினை உண்டு மகிழ்ந்தோம்' என்று அசரீரியாகச் சொன்னார்.

"திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி' என்ற பழமொழி நம் நாட்டில் வழங்குவது யாவரும் அறிந்ததே!
சேந்தனார் களி நிவேதித்த செய்தியை திருக்களிற்றுப் படியார் என்ற சித்தாந்த சாஸ்திர நூல், 

"அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை
அவிழ்ந்த மனத்தால் அவிழ்க்க அவிழ்ந்த சடை
வேந்தனார்க் கின்ன முதமாயிற்றே மெய்யன்பிற்
சேந்தனார் செய்த செயல்'

என்று புகழ்ந்து கூறுகிறது.

சிவநேசச் செல்வர்களாகிய சைவர்களுடைய "கோவில்' சிதம்பரம். இத்தலத்தை பூலோக கைலாயம், விசேஷ க்ஷேத்திரம், இதயத்தானம் என்றும் கூறுவர்.

பிற தலங்களில் உள்ள மூர்த்திகள் இந்த இதயத் தானத்தில் ஒடுங்கி, மீண்டும் காலையில் தத்தம் தலங்களுக்குச் செல்வார்கள் என்பர். கலைகள் எல்லாம் அர்த்தசாமத்தில் இங்கே வந்து ஒடுங்குவதால், அர்த்தசாம தரிசனம் இங்கே விசேஷமாகக் கருதப்படுகிறது.

தல லிங்கத்தின் பெயர் மூலநாதர் என்பது. இவர் எழுந்தருளியிருக்கும் இடம் மூல ஸ்தானம். 

கூத்தப் பெருமானின் நடன தரிசனம் காணவேண்டுமென்று பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்ற முனிவர்கள் இந்த லிங்கத்தை நோக்கி நீண்ட காலம் தவம் கிடந்தனர்.

திருவாரூரில் சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடத் தொடங்கியபோது இறைவனே அசரீரியாக, "தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்' என்று அடியெடுத்துக் கொடுத்தது, தில்லையின் தலைமையைக் காட்டும் எனலாம். 

அற்புதமான இந்த மார்கழித் திருவாதிரை நாளில், ஆருத்ரா தரிசனமாம் ஆடலரசனின் தாண்டவக் கோலத்தை தரிசிப்போம். ஆன்ம லயம் பெறுவோம்!

செவ்வாய், 18 டிசம்பர், 2012

திருவெம்பாவை நோன்பு

மாதங்களிள் சிறந்த மார்கழி இறை வழிபாட்டிற்கு உரிய மாதம். மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்புகள் நடைபெறும்.

இந்த ஆண்டு வரும் 28-12-2012 மார்கழி திருவாதிரை.

திருவாதிரை தினத்தில் தில்லைநடராஜப் பெருமான் தேரில் வீதி வலம் வருவதை ஆருத்ரா தரிசனம் செய்வதற்காக செல்வர்.

சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது.

திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி டைப்பிடிக்கப்படும் நோன்பு திருவெம்பாவை நோன்பு.

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

அருகம் புல்லின் முகவரி


பெயர் :அருகம்புல் (Bermuda grass,bahama grass)
தாவரவியல் பெயர் :ச்ய்நோடன் டச்ட்டிலோன்



அருகம் புல்லின் முகவரி:
எளிதில் அனைவருக்கும் கிடைக்கும் அருகம்புல், இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மரு
ந்தாகும். பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்குள்ளது.
அருகம்புல் ஒரு மருத்துவ மூலிகையாகும்.
இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. அருகம்புல்லில் சாறு எடுத்து உட்கொண்டால் உடல் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.
வாதம், பித்தம், சிலேத்துமம்(கபம்) ஆகிய முத்தோடங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், இரத்தப் பித்தம், சிறு விடப் பூச்சிகளின் கடி ஆகியவைகளுக்கு நல்லதொரு மருந்து. இரத்தம் சுத்தமாக, வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க , நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது.
புல்லின் மருத்துவ குணங்கள்:
1. அருகம்புல் முழுச்செடியும் மருந்தாகப் பயன் அளிக்கிறது. சிறுநீரில் இரத்தம் கசிதல், சீறநீரகங்களில் கட்டிகள் தோன்றுதல், மேகம், வெட்டை, பால்வினை நோய்கள், எய்ட்ஸ், கிட்னி ஃபெயிலியர் போன்ற நோய்களுக்கு மூலிகை மருத்துவர்கள் அருகம்புல்லைத் தருகின்றனர்.
2. உயிர் குடிக்கும் நோய்களில் மாமருந்தாகப் பயன்படுத்துகின்றார்கள். நீல அருகம்புல் சளி, பித்தம், இரத்த நோய்கள், அக்கி என்னும் (HERPES) தோல் நோய், நாக்கு வறட்சி, எரிச்சல் போன்ற நோய்களைக் குணமாக்குகிறது.
3. யுனானி மருத்துவத்தில் அருகம்புல் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை முறையாக பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.


4. அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.

5. உடல் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக உள்ளது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அது சீராக்குகிறது.
6. வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.
7. நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.
8. நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.
அருகம்புல் சாறை தயாரிப்பது எப்படி?
1. வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைபடுத்த வேண்டும்.
2. பின்னர் அருகம்புல்லுடன் கொஞ்சம் தண்ணீரைச் சேர்த்து, (தேவைப்பட்டால்) துளசி, வில்வம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுக்க வேண்டும். வீட்டில் மிக்ஸி இருப்பின், அதைப் பயன்படுத்தியும் சாறு தயாரிக்கலாம்.
3. காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவில் இதை பருகலாம்.
4. உடல் இளைக்க அப்படியானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம்.


5. அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.

6. அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும்.

7. அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போலாகி விடும்.
எப்போதும் எல்லோராலும் அருகம்புல் சாறு தயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது. இதனால் ரெடிமேடாக கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்கு கிடைக்கிறது. காலை நேரங்களில் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்வோர் இதை பெருமளவில் வாங்கி பருகுகின்றனர்.

வாழ்க வையகம் !!! வாழ்க வளமுடன்!!!

சனி, 15 டிசம்பர், 2012

இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம்!

இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம்!

இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம் என்பது ஆகும்.இப்போர் விமானத்தை உருவாக்குகின்றமைக்கு யாழ்ப்பாண தமிழர்கள் வழங்கி இருந்த நிதிப் பங்களிப்புக் காரணமாகவே இப்பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது.

இப்போர் விமானம் குறித்த தகவல்கள் மிகவும் சுவாரஷியமானவை. முன்னைய கால விமானங்கள் 100 குதிரை வலு என்ஜின்களுடன் இயங்கி வந்தன. இவை மரம்
, துணி, வயர்கள் போன்றவற்றால் ஆக்கப்பட்டு இருந்தன.

முதலாம் உலகப் போர் இடம்பெற்ற காலம். எதிரிகளை வேவு பார்ப்பதற்கும், குண்டு வீசுவதற்கும் சிறந்த பொறியாக விமானம் கண்டு கொள்ளப்பட்டது. ஆனால் மேற்சொன்ன ரக விமானங்கள் அவற்றின் வடிவமைப்புக் காரணமாக எளிதில் தாக்குதல்களுக்கு உள்ளாகின.

போர் விமானத்தை உருவாக்க தீர்மானித்தது இங்கிலாந்து அரசு. ஆனால் இதை உருவாக்குவதற்கான பணம் இன்றி திணறியது. இந்நிலையில் காலனித்துவ நாடுகளுக்கு செய்தி அனுப்பியது.

மலேசியாவை அப்போது நிர்வகித்து வந்தவர் டாக்டர் அல்மா பேக்கர். வரிகள் மூலம் தேவையான பணத்தை பெற முடியாது என்று உணர்ந்து இருந்தார். வித்தியாசமான பிரசார உத்தி ஒன்றை தொடங்கினார். போர் விமானத்துக்கு உதவி செய் என்பது இப்பிரசாரம். அதிக பணம் தருகின்றவர்கள் முன்மொழிகின்ற பெயர் இவ்விமானத்துக்கு சூட்டப்படும் என்று உறுதிமொழி வழங்கி இருந்தார்.

யாழ். மல்லாகத்தை பூர்வீகமாக கொண்ட சுப்பிரமணியம் என்பவர் மலேசியாவில் உயர் தொழில் வகித்து வந்தார். இவரை இப்பிரசாரம் மிகவும் கவர்ந்தது. மலேசியாவில் குடியேறி இருந்த யாழ்ப்பாணத்தார்களிடம் இருந்து நிதி சேகரித்து F.E.2b ரக விமானம் ஒன்றை பரிசாக இங்கிலாந்து அரசுக்கு வழங்கினார்.

அன்றைய நாளில் 2250 ஸ்ரேர்லிங் பவுண்டு வரை பணம் சேர்க்கப்பட்டு இருந்தது. இவ்விமானம் இரட்டைச் சிறகுகள் கொண்டிருந்தது. இரண்டு பயணிகளை கொண்டு செல்லக் கூடியதாகவும், குண்டு வீசவும், துப்பாக்கிச் சமரில் ஈடுபடவும் வேண்டிய வசதிகளை கொண்டதாகவும் இருந்தது. பிரித்தானிய அரச விமான தொழில்சாலையில் தயாரிக்கப்பட்டது.

ஜேர்மனியர்களின் குண்டு மழைகளுக்குள் தீவிரமாக நுழைந்து பேரழிவுகளை ஏற்படுத்தியது. முதலாவது உலக மகாயுத்தத்தின் பின் அருங்காட்சி அகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

பலாவின் சுளையறிய வேண்டுதிலேல்

முக்கனிகளுள் ஒன்றுதான் பலாப்பழம். இதன் வாசனையோ பழத்தின் ருசியைக் காட்டிவிடும். வெளித்தோற்றத்திற்கு கரடுமுரடாக காட்சி அளித்தாலும் உள்ளிருக்கும் சுளைகள் அழகாகவும் இனிமையாகவும் இருக்கும்.
பலாப்பழத்தினை சிலர் விரும்பி உண்பார்கள். சிலர் குளிர்காலத்தில் சாப்பிடக்கூடாது என்று பல கருத்துக்கள் முன்வைப்பார்கள். ஆனால் பழத்திலுள்ள மருத்துவக் குணங்களை அறியாமலும் இருக்கின்றார்கள்.


சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூற
ப்பட்டுள்ளது.

"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."
- கணக்கதிகாரம்-




விளக்கம் :


பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம் !



பலாப்பழத்தில் விட்டமின்களும், பிற சத்துப் பொருட்களும் கணிசமாக இருப்பதால், உடல் வளர்ச்சிக்கும், வலிமை பெறவும் ஒப்பற்ற பழமே.
 
சருமத்தை பளபளப்பாக வைக்கும் சிறப்புக் குணம் பலாப்பழத்திற்கு உண்டு. பல் உறுதி பெற, ஈறு கெட்டியாக இருக்க, பலாப்பழம் சாப்பிட வேண்டும்.
 
உடம்பில் தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி பலாப்பழத்தில் இருக்கிறது. அதுமட்டுமா? எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை பலாப்பழத்திற்கு உள்ளது என ஜேர்மனி, அமெரிக்காவில் மேற்கொண்ட ஆரம்ப நிலை ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து இதுபற்றிய ஆராய்ச்சி நடந்து வருதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
பலாப்பழ பானகம் உடம்புக்கு குளிர்ச்சியைத் தரும் தன்மையது. உடலில் உள்ள தசைகளை சீராக இயங்க வைக்கும் ஆற்றல் பலாப்பழத்திற்கு உண்டு.
 
தோல் வறட்சி அடையாது பாதுகாக்கும் சத்துப் பொருள் பலாப்பழத்தில் உரிய அளவு இருக்கிறது. பலாப்பழ நீர் இரவில் அருந்தினால் நன்கு தூக்கம் வரும். தூக்கமில்லாமல் அவதிப்படுவோர்க்கு நல்ல எளிய மருந்து.
 
பலாப்பழத்துடன் சிறிது கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், உடல் அசதி, களைப்பு நீங்கி, உற்சாகம் ஏற்படும். பலாப்பழத்துடன் சிறிது கசகசாவை மென்று சாப்பிட்டால், குடல் அழற்சி நீங்கும்.
 
பலாப்பழத்துடன், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால், உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் அத்தனையும் வெளியேறி, நலன் பயக்கும்.
 
நீரிழிவு நோய் உள்ளவர்கள் பலாப்பழத்தை சாப்பிடக் கூடாது. வெறும் பலாப்பழத்தை அதிகம் உண்ணுவதால் ஆஸ்துமா நோயை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெள்ளி, 14 டிசம்பர், 2012

கார்த்திகைப் பண்டிகையன்று என்ன விசேஷம்?



கார்த்திகைப் பண்டிகை தமிழகத்தில் கொண்டாடப்
படுகின்ற முக்கிய பண்டிகைகளில் ஒன்று. எந்த ஆண்டாக இருந்தாலும் சரி, கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியையொட்டித் தான் இப்பண்டிகை வரும். அனேகமாக அன்றைய தினம் கார்த்திகை நட்சத்திரமாக இருக்கும். நாம் இங்கு கவனிக்கப் போவது மத ரீதியிலான விஷயங்கள் அல்ல. இது வானவியல் (Astronomy) பற்றியது. அதாவது கார்த்திகைப் பண்டிகை கொண்டாடப்படுவதற்கு எவ்விதம் வானவியல் அம்சங்கள் காரணமாக உள்ளன என்பதை விளக்குவது.

பூமியைச் சந்திரன் சுற்றி வருவதை நாம் அறிவோம். பௌர்ணமியன்று சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் இதே வரிசையில் நேர்கோட்டில் இருப்பதாகச் சொல்லலாம். அந்த நேர்கோட்டை நாம் நீட்டிக் கொண்டே போனால் கோடானு கோடி கிலோ மீட்டருக்குப் பிறகு கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் இருக்கின்ற இடத்துக்குப் போய்ச் சேரும். அதாவது சூரியன் - பூமி - சந்திரன் - கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் ஆகிய நான்கும் கிட்டத்தட்ட ஒரே வரிசையில் இருக்கும்.


டிசம்பர் 10 ஆம் தேதி இவ்விதமாகத்தான் இருக்கும். ஆண்டில் ஒரு முறை தான், அதாவது கார்த்திகைப் பௌர்ணமியன்று தான், இந்த நான்கும் ஒரே வரிசையில் இருக்கும். இதை அடிப்படையாக வைத்தே கார்த்திகைப் பண்டிகை.கொண்டாடுகிறார்கள். வானில் ஆண்டில் ஒரு முறை காணப்படுகின்ற ஓர் ‘அணிவகுப்பை’  பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள் எனலாம்.

தமிழகத்தின் பல பண்டிகைகள் இவ்விதம் வானவியல் அடிப்படையிலானவை. பண்டைக்காலத்தில் தமிழர்கள் வானவியலில் வல்லுநர்களாக இருந்ததை இவை காட்டுவதாகச் சொல்லலாம். சங்க இலக்கியங்களிலும் வானவியல் பற்றிய குறிப்புகள் உள்ளன.

வானவியல் நிபுணர்கள் வானத்தை 12 ராசிகளாகப் பிரித்துள்ளனர். அவற்றில் ரிஷப ராசியும் ஒன்று. இந்த ரிஷப ராசியில் அடை போன்று பல நட்சத்திரங்கள் காணப்படும். இந்த நட்சத்திரக் கூட்டத்துக்கு நமது முன்னோர்கள் கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்று பெயர் வைத்தனர்.

சந்திரன் ஓயாது பூமியைச் சுற்றி வருகின்றது. ஆண்டில் சுமார் 12 அல்லது 13 பௌர்ணமிகள் வரும். ஏற்கெனவே குறிப்பிட்டபடி கார்த்திகை மாதப் பௌர்ணமியில் மட்டுமே சூரியன், பூமி,பௌர்ணமி சந்திரன், கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் ( ரிஷப ராசி) ஆகிய நான்கும் ஒரே நேர் கோட்டில் இருக்கும். மற்ற மாதங்களில் வருகின்ற பௌர்ணமிகளில் சந்திரனுக்குப் பின்னால் ரிஷப ராசிக்குப் பதில் வேறு ராசி அமைந்திருக்கும்.

வேடிக்கை என்னவென்றால், கார்த்திகைப் பண்டிகையன்று கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தை வானில் காண இயலாது. வானில் சந்திரனுக்கு அருகில் கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் இருக்கும் என்பதால் பௌர்ணமி நிலவின் பிரசாகத்தின் காரணமாக அது புலப்படாது. ஆனால் ஜனவரி மாதத்தில் கிழக்கு வானில் இரவு 8 மணிக்கு மேல் காண முடியும். பின்னர் ஏப்ரல்-மே மாதங்களில் மேற்கு வானில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தைக் காண முடியும்.

இந்த நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள Alcyone எனப்படும் நட்சத்திரமே கார்த்திகை நட்சத்திரமாகக் அழைக்கப்படுகிறது. வானவியலில் இந்த நட்சத்திரம் Eta Tauri என்று அழைக்கப்படுகிறது. இது சூரியனை விட 1000 மடங்கு பிரகாசம் கொண்டது. வட மொழியில் கார்த்திகை நட்சத்திரம் க்ருத்திகா எனப்படுகிறது. இந்தியாவில் ஆண்களில் பலர் கார்த்திக், கார்த்திகேயன் என்று தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கிறார்கள். பெண்களாக இருந்தால் க்ருத்திகா என்று பெயரிடுகின்றனர்
படத்தில் இடமிருந்து இரண்டாவதாக உள்ளது தான்
கார்த்திகை (Alcyone) நட்சத்திரம்.
படம்: courtesy NASA/ESA/AURA/Caltech
முருகன் பற்றிய புராணக் கதையில் கார்த்திகைப் பெண்டிர் அறுவர் முருகனை வளர்த்ததாகக் கூறப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள ஆறு நட்சத்திரங்களும் அவர்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இக்காரணத்தால் தான் முருகனுக்குக் கார்த்திகேயன் என்றும் ஒரு பெயர் உள்ளது.

ஜப்பானிய மொழியில் இந்த நட்சத்திரக் கூட்டதுக்கு சுபாரு என்று பெயர். ஜப்பானிய கார் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்துக்கு சுபாரு என்று வைத்ததுடன் நில்லாமல் அதன் லோகோவில் ஆறு நட்சத்திரக் குறிகளைப் போட்டுக்கொண்டுள்ளது. அரபு மொழியில் கார்த்திகை நட்சத்திரத்துக்கு அல் துராயா என்று பெயர். இப்பெயரில் சேடிலைட் டெலிபோன் நிறுவனம் ஒன்று உள்ளது.

இந்த நட்சத்திரக் கூட்டத்துக்கு ஆங்கிலத்தில் Pleiades என்று பெயர். ஏழு சகோதரிகள் என்பது அதன் பொருள். கிரேக்க புராணத்தில் வரும் ஏழு சகோதரிகளின் பெயர்கள் இந்த நட்சத்திரங்களுக்கு வைக்கப்பட்டன.

வெறும் கண்ணால் பார்த்தாலே இந்த நட்சத்திரக் கூட்டத்தில் ஆறு நட்சத்திரங்கள் தெளிவாகத் தெரியும். பார்வை கூர்மையாக உள்ளவர்களால் ஏழு நட்சத்திரங்களைக் காண இயலும்.

அரேபியர் பல நூற்றாண்டுகளாக கடல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர்கள்.  திசைகாட்டும் கருவி கூட இல்லாத காலத்தில் இரவில் நட்சத்திரங்க்ளை வைத்தே திசை அறிந்தனர். ஆகவே பார்வைக் கூர்மை முக்கிய அம்சமாக இருந்தது. எவர் ஒருவரால் வெறும் கண்ணால் கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தில் ஏழு நட்சத்திரங்களைக் காண முடிந்ததோ அவர்களே மாலுமிகளாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர் என்று சொல்வார்கள். பல நட்சத்திரங்களுக்கு அரபு வானவியலார் வைத்த பெயர்கள் இன்றளவும் வானவியல் துறையில் அப்படியே பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வானவியலின்படி கார்த்திகை நட்சத்திரக் கூட்டமானது Open Cluster வகையைச் சேர்ந்தது. தமிழில் இதை நட்சத்திரத் திரள் எனலாம். கார்த்திகை நட்சத்திரத் திரள் சுமார் 450 ஒளியாண்டு தொலைவில் உள்ளது (ஒரு ஒளியாண்டுத் தொலைவு என்பது 9 லட்சத்து 50 ஆயிரம் கோடி கிலோ மீட்டர்).

இந்த நட்சத்திரக் கூட்டம் தோன்றி சுமார் 10 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இன்னும் சுமார் 25 கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் கார்த்திகைக் கூட்டத்தில் உள்ள நட்சத்திரங்கள் வெவ்வேறு திசையில் நகர்ந்து சென்று விடலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இது டிசமபர் 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வான்காட்சி எப்படி இருக்கும்
என்பதைக் காட்டும் படமாகும்.வலது ஓரத்தில் வெண்மை நிற வட்டம்
பௌர்ணமி சந்திரன். அதற்கு அருகே Alcyone இருப்பதைக் காணலாம்

வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி வேறு ஒரு வகையிலும் விசேஷமானது. அன்று சந்திர கிரகணம். சூரியன் - பூமி - சந்திரன் ஆகிய மூன்றும் நேர் கோட்டில் இருப்பதால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழுகிறது. இதன் விளைவாக சந்திர கிரகணம் நிகழ்கிறது.

சந்திரனின் சுற்றுப்பாதை சாய்வான தளத்தில் உள்ளது. ஆகவே பல பௌர்ணமிகளில்  சந்திரன்  பூமியின் நிழலுக்குள் இல்லாமல் அதற்கு மேலே அல்லது கீழே அமைந்திருக்கிறது. ஒவ்வொரு பௌர்ணமியிலும் சந்திர கிரகணம் ஏற்படாததற்கு இதுவே காரணம்.அபூர்வமாக சந்திரன் தனது சுற்றுப்பாதையில் பூமியின் நிழலுக்குள் அமைந்து விடும். அப்போது சந்திர கிரகணம் நிகழும்.

நன்றி இணையம்
என்.ராமதுரை

உங்களால் சொல்லமுடியுமா இது "காளையா அல்லது யானையா " ?

உங்களால் சொல்லமுடியுமா இது "காளையா அல்லது யானையா " ? 
வியக்க வைக்கும் தமிழனின் கலை

சுரைக்காயின் மருத்துவ குணங்கள்

மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் 
செரிக்கும் தன்மை கொண்டவை.


நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம்.

சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும்.

சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

உடல் சூடு நீங்க

இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.

சிறுநீர் பெருக

மனித உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து.

பித்தத்தைக் குறைக்க

உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.

· சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

· உடலை வலுப்படுத்தும்.

· பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும்.

· இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

· குடல் புண்ணை ஆற்றும்.

· மலச்சிக்கலைப் போக்கும்

· மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.

சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.

சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.

சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.

ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " !

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதி
லிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் " சப்தஸ்வரங்கலான " " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது ! சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்திமூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது .இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் " மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி " போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது .


அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும். இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை, உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது.சரி இது எதற்காக பயன்பட்டது ? அந்தக்காலத்தில் இருந்த இசைக்கலைஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர். இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது .

இந்த இசைத்தூண்களை "மிடறு" என்று அழைத்தார்கள். இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான " அலைக்கற்றையை " உருவாக்குகின்றது . எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது?

இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு."அனிஷ் குமார் " என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள " இயற்பியல்" அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது. "In situ metallography " (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/ corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது " தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் " என தெரிய வந்தது. " spectral analysis "என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது " தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றயினால் " சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது. சப்தம் உருவாவதே ஒரு அதிசயாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது ?

நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல். இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை. ஆனால், இந்தத் தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை.

இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த " இசைத்தூண்கள் " ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது. அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது. ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள், இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள். இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தயுமாவது கட்டிக்காப்போம்.

தேடல் தொடரும்...

படத்தில் உள்ளது நெல்லையப்பர் கோவிலின் இசை தூண். ஆனால் இதை போன்ற இசை தூண்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில், சுசீந்திரம் கோவில் போன்ற பல தமிழக மற்றும் தென் இந்திய கோவில்களில் காணலாம்.

நன்றி: சசிதரன்
http://www.facebook.com/SasidharanGS

வியாழன், 13 டிசம்பர், 2012

திருஞானசம்பந்தர் தலம்: மதுரை

மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப் படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமய
த்தில் உள்ளது நீறு;
செந்துவர் வாய் உமை பங்கன், திரு ஆலவாயான் திருநீறே.

வேதத்தில் உள்ளது நீறு; வெந்துயர் தீர்ப்பது நீறு;
போதம் தருவது நீறு; புன்மை தவிர்ப்பது நீறு;
ஓதத் தகுவது நீறு; உண்மையில் உள்ளது நீறு;
சீதப் புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.

முத்தி தருவது நீறு; முனிவர் அணிவது நீறு;
சத்தியம் ஆவது நீறு; தக்கோர் புகழ்வது நீறு;
பத்தி தருவது நீறு; பரவ இனியது நீறு;
சித்தி தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.

காண இனியது நீறு; கவினைத் தருவது நீறு;
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு;
மாணம் தகைவது நீறு; மதியைத் தருவது நீறு;
சேணம் தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.

பூச இனியது நீறு; புண்ணியம் ஆவது நீறு;
பேச இனியது நீறு; பெருந்தவத் தோர்களுக்கு எல்லாம்
ஆசை கெடுப்பது நீறு; அந்தம்அது ஆவது நீறு;
தேசம் புகழ்வது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.

அருத்தம் அது ஆவது நீறு; அவலம் அறுப்பது நீறு;
வருத்தம் தணிப்பது நீறு; வானம் அளிப்பது நீறு;
பொருத்தம் அது ஆவது நீறு; புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.

எயில் அது அட்டது நீறு; இருமைக்கும் உள்ளது நீறு;
பயிலப் படுவது நீறு; பாக்கியம் ஆவது நீறு;
துயிலைத் தடுப்பது நீறு; சுத்தும் அது ஆவது நீறு;
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே.

இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு;
தராவணம் ஆவது நீறு; தத்துவம் ஆவது நீறு;
அரா வணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.

மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு;
மேல் உறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண் பொடிநீறு;
ஏல உடம்பு இடர் தீர்க்கும்; இன்பம் தருவது நீறு;
ஆலம் அது உண்ட மிடற்று, எம் ஆலவாயான் திருநீறே.

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட
கண் திகைப் பிப்பது நீறு; கருத இனியது நீறு;
எண்திசைப் பட்ட பொருளார் ஏத்தம் தகையது நீறு;
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே.

ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன்
தேற்றித், தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயினதீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே

தெரியாத ஆலய தகவல்:


தர்மபுரியிலுள்ள "மல்லிகார்ஜுனர்" கோயிலில் உள்ள "நவாங்க" மண்டபத்தில் நூறு தூண்கள் உள்ளன. அதில் இரு தூண்களின் அடி, பூமியைத் தொடுவதில்லை. ஒரு.ம
ெல்லிய குச்சியை நுழைத்து தூணின் மறுபக்கத்திலிருந்து எடுத்து இதைப் பரிசீலித்துப் பார்க்க முடியும். ஒவ்வொரு தூணும் 2 டன் முதல் 3 டன் வரை எடை கொண்டது.

சனி, 8 டிசம்பர், 2012


"அர்ஜுனா அர்ஜுனா "

  பலமா இடி இடிக்கும் பொழுது அந்த சத்தத்தில காது அடைச்சிக்கும். அப்ப "அர்ஜுனா அர்ஜுனா "னு சொன்னா வாய் திறந்து குவிஞ்சி அப்பறமா பிளக்கும். அப்போ தாடைகள் நல்லா அகன்று காற்று வெளியேறும். அடைச்சிட்டு இருந்த காது சரி ஆகிடும்.

வெள்ளி, 7 டிசம்பர், 2012

வளைகாப்பு நடத்துவது ஏன்?

கர்ப்பிணி பெண்கள் கடைசி மூன்று மாதங்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய தருணம் . அக்காலத்தில் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண் கிருமிகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேப்பிலை காப்பு அணிவித்தனர்.

எதிலும் அவசரம் இல்லாமல் நிதானமாக செயல்படுவதற்கு கை நிறைய கண்ணாடி வளையல் அணிவித்து அவை உடையாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறினர். மேலும் கண்ணாடி வளையல் சத்ததிற்கு குழந்தையின் கேட்கும் திறன் அதிகரிக்கும்.

மருதோன்றி/மருதாணி பூசுவது ஏன்?


கை விரல்களில் மருதோன்றி பூசுவதால் நகங்களில் உள்ள கிருமிகளை கொன்று விடுகிறது. எனவே நகச்சுத்தி போன்ற நோய்கள் தடுக்க படுகின்றன. உடல் சூட்டை குறைத்து விடுகின்றன மேலும் மனக்குழப்பத்தை தவிர்கின்றன.

விசேஷங்களில் வாழை மரம் கட்டுவது ஏன் ?


வாழை மரம் காற்றில் இறக்கும் துர்நாற்றத்தை போக்கி விடும். மேலும் வாழை பட்டை சாறு விஷத்தை முறிக்கும் தன்மை. உண்டு. தீ புண் ஏற்பட்டால் வாழை பட்டை மற்றும் இலையில் வைத்தே வைத்தியம் புரிவர். எனவே பத்து பேர் ஒன்றாக கூடும் இடத்தில் அசம்பாவிதம் நடந்தால் உதவுவதற்காகவே வாழை மரத்தை கட்டி வைத்தனர்.

அரசமரத்தை சுற்றுவதால் புத்திர பாக்கியம்

ஏற்படுமா?

பெண்ணின் ஓவரிக்கு (கருப்பை) சினை முட்டைகள் வந்து சேரமுடியாவண்ணம் ஃபிலோப்பியான் ட்யூப் போன்ற உள் உறுப்பில் ஏதாவது தடை அல்லது அடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் .அரசமரத்தை சுற்றி வந்து நமஸ்கரிக்க
ும்போது பெண்ணின் அடிவயிறு அழுத்தப்படுகின்றது. இம்மாதிரி பல முறை அழுத்தப்படும்போது அந்த அடைப்பானது சிறிது சிறிதாக நீங்கி விடக்கூடும்.

தாவரங்களில் அதிகப்படியான பிராண வாயுவை வெளியிடும் தாவரம் அரச மரம்தான். அதற்கடுத்து வேப்பமரம். சூரிய உதயத்தில் அரச பிரதட்சிணம் செய்யும்போது இம்மரத்தடியில் ஆரோக்கியமான காற்றோட்டம் நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன.

சாம்ப்ராணி போடுவது ஏன்?


சாம்ப்ராணி ஒரு வகை மரப்பிசினே. தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் இருக்கும். சாம்பிராணி புகை போடும் பொழுது விஷ ஜந்துக்கள் தொல்லை இருக்காது. இவை வெளியேறிவிடும். எனவே அந்தி சாயும் வேளைகளில் சாம்பிராணி தூபம் போடுவர்.

விளக்கு வைத்தவுடன் வீடு கூட்டி குப்பை கொட்ட கூடாது ஏன் ?


அக்காலத்தில் மின்சாரம் இல்லை. சிறு அகல்விளக்கு, வெளிச்சம் பெரியதாக தந்திருக்காது. அச்சமயம் நாம் பயன்படுத்திய சிறுபொருட்கள் ( விலையுயர்ந்த அல்லது தேவையுள்ள சிறிய பொருட்கள்) ஏதேனும் த

வறுதலாக கீழே விழுந்து கிடந்து, கூட்டிப் பெருக்கி குப்பையாக எடுக்கும்பொழுது அவற்றுடன் சேர்த்து கொட்டபடலாம். இதனையே பகல் நேரத்தில் செய்தால் ஒருவேளை நம் கண்களுக்குப் புலப்படலாம். எனவே மாலையில் கூட்டிப் பெருக்குதல் கூடாது என சொல்லி சென்றனர்.

அறுவை சிகிச்சையின் தந்தை - சுஸ்ருதா


சுஸ்ருதா பண்டைய இந்திய அறுவை சிகிச்சை நிபுணர். அவர் தமது சுஸ்ருதா சம்ஹிதா நூலில் 300 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நடைமுறைகள், 120 அறுவை சிகிச்சை கருவிகள் பற்றி விவரிக்கிறார். மேலும் எட்டு பிரிவுகளாக மனித அறுவை சிகிச்சையை வகைப்படுத்துகிறார். அவர் கங்கை நதி கரையின் அருகில் வாழ்ந்து வந்தார். இவர் காலம் கி. மு. 800 ஆம் நூற்றாண்டு.

இரவில் மரத்தடியில் படுக்க கூடாது - ஏன்?


மனிதன் பிராண வாயுவை (oxygen)உள் வாங்கி, கார்பன் டை ஆக்சைடை வெளிவிடுகிறான். மரங்களோ பகலில் கார்பன் டை ஆக்சைடை உள் வாங்கி ஒளிசேர்க்கை செய்கின்றன, பிராண வாயுவை (oxygen) வெளிவிடுகிறது.இரவில் பிராண வாய

ுவை உள் வாங்கி, கார்பன் டை ஆக்சைடை வெளிவிடுகிறது.

எனவே, இரவில் மரத்தின் கீழே படுத்தால் போதுமான அளவு பிராண வாயுகிடைக்காது. மூச்சு திணறல் ஏற்படும். இக்காரணத்தினாலேயே நம் முன்னோர்கள் இரவில் மரத்தடியில்படுக்க கூடாது என்று கூறினார்கள்.

வணக்கம் சொல்லும் பொழுது கைகூப்புவது ஏன்?


வணக்கம் சொல்லும் பொழுது இரு கைகளையும் கூப்புவதால் அனைத்து விரல் நுனிகளும் ஒன்று சேர்ந்து நம் புலன் உறுப்புகளை (கண், காது மற்றும் மூளை ) தூண்டி விடுகின்றன. இதனால் நாம் வணங்கும் நபரை நீண்ட நாட்கள் நினைவில் கொள்ள உதவுகிறது.

தும்மல்

தும்மல் என்ற செயல் உடற்கூற்றியல் சார்ந்த நிகழ்வு. அளவுக்கு மீறிய நெடியைத் தாங்கமுடியாமல், அதை முகர்வதால் மூச்சு விடுவதில் திணறல் ஏற்பட்டு அதை, விடுவிக்க மூக்கும் வாயும் முழு ஆற்றலுடன் மூச்சை வெளியேற்றுவதால் உண்டாவது.

தும்மல், "

நீர்க்கோவை'யாலும் (ஜலதோஷம்) ஏற்படும். இஃதன்றி, காற்று மாசு, சுற்றுச்சூழல், உணவு, உடை, அணிகலன் இவற்றின் ஒவ்வாமையாலும் தும்மல் வரும்.

தும்மல் போடும் போது நமது உடற்செயல்கள் அனைத்தும் நின்று விடுகின்றன. இதயம் கூட அந்த கணப்பொழுதில் நின்று விடுகிறது. எனவே நம் ஊரில் யாரேனும் தும்மல் போட்டால் அவரை வாழ்த்தும் பொருட்டு "வாழ்க பல்லாண்டு!' அல்லது "நூறு வயது வாழ்க"' என்று கூறுவர்

தும்மலின் வேகம் மணிக்கு 100 மைல்.

உச்சி வேளையில் கிணற்றை எட்டி பார்க்க கூடாது என சொல்ல்வது ஏன்?

உபயோக படுத்தாத கிணறுகளில் நச்சு காற்று உருவாகி இருக்கும். உச்சி வெயில் நேரத்தில் கிணற்றில் சூரிய ஒளி விழும். சூரிய ஒளியால் வெப்பமடைந்த நச்சு காற்று விரிவடைந்து மேலே வரும். அந்த வேளையில் நாம் கிணற்றை எட்டி பார்த்தல் அவ்வாயுவால் தாக்கப்பட்டு கிணற்றுக்குள் விழ வாய்ப்பு அதிகம். எனவே உச்சி வேளையில் கிணற்றை எட்டி பார்க்க கூடாது.

பிரபஞ்சம் உருண்டையாகத்தான் பிறந்துள்ளது - மணிவாசகர்

 
ஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்கிறார்.

"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின


மேல்பட விரிந்தன
இன்நுழை கதிரின் துன் அணுப் புரைய
சிறியவாகப் பெரியோன் தெரியின்"

விளக்கம்:


பிரபஞ்சம் உருண்டையாகத்தான் பிறந்துள்ளது. அதிலே நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் இறைந்து கிடக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று தம் ஒளியால் எழில் கொடுக்கின்றன. சூரியனின் துல்லியமான அணுக்கதிர்கள் தாக்குவதால் ஒளியற்ற கிரகங்கள் கூட சிறியதாக மின்னுகின்றன.

மாணிக்கவாசகர் எந்தத் தொலைநோக்கு கருவியைக் கொண்டு இதைப் பார்த்தார். ராடாரின் உபயோகம் அறியப்பட முன்னரே தெரிவிக்கப்பட்ட செய்தியல்லவா இது. அதுவும் பூமி உட்பட எல்லாக் கிரகமுமே உருண்டை என்று மாணிக்கவாசகர் சொல்லி விட்டார். அவை ஒன்றை ஆதாரமாக் கொண்டுள்ளன என்பது ஈர்ப்பு விசையைத்தான் சுட்டுகிறது. அது மட்டுமா நூறு கோடிக்கு மேலே விண்வெளியில் கோள்கள் சிதறிக் கிடக்கின்றன என்று அவர் சொல்லி எத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின் அது உண்மைதான் என்கிறது இன்றைய விஞ்ஞானம்.

இதைக் கணிக்கக் கணக்குத் தெரிய வேண்டும்! ஆனால் அந்தத் தமிழனின் கூற்று எடுபடவில்லை அல்லது அறியப்படவில்லை.

இனித் திருக்குறளிலே ஒரு வானியல் விடயம் பேசப்படுகின்றது. இந்த உலகத்திலே வாழ்வாங்கு வாழ்பவர்கள் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்கள்.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்"

இது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. வானுலகம் என்று ஒன்று இருக்கின்றது என்பது பலரின் நம்பிக்கைக்கு உரிய விடயம். அது உலகமாகவோ அல்லது கிரகமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் நான் எனது என்ற செருக்கை விட்டவர்கள் வானுக்கும் உயர்ந்த உலகம் போவார்கள் என்கிறாரே திருவள்ளுவர். அது எந்த உலகம்.

வான் உலகத்துக்கும் உயர்ந்த உலகம் என்றால் எப்படிப் பொருள் கொள்வது? பூமியில் இருந்து அடுத்த கிரகம் தொலைவானது. அதிலிருந்தும் தொலைவான உலகம் என்று தானே பொருள். இஸ்ரோவுக்கும்(ISRO) முன்னரே வள்ளுவருக்கு வானியல் அறிவு இருந்திருக்கிறது. அதற்கான தூர வேறுபாடும் தெரிந்திருக்கிறது.

இதையே இராமாயணம் பாடிய கம்பர், வாலியின் இறப்புப் பற்றிப் பேசும் போது

"தன்னடி ஆழ்த லோடும் தாமரைத் தடங் கணானும்
பொன்னுடை வாளை நீட்டிப் நீயிது பொறுத்தி என்றான்
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி
அந்நிலை துறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான்."

இதில் வாலி இறந்து, வானுலகத்திர்க்கும் அப்பால் உள்ள உலகத்திற்கு செல்கிறான் என்று குறிப்பிடுகின்றார். அது எந்த உலகம்?

அது போல வேறு கிரகத்தவர்கள் வந்து சென்றது பற்றிச் சிலப்பதிகாரத்திலும் ஒரு குறிப்பு உண்டு.

"பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்
ஒரு முலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி அவள்
காதல் கொழுநனைக் காட்டி அவளொடும் எம்
கட்புலம் காண விட்புலம் போயது
இறும்பூது போலும்"

"ஒரு மார்பை இழந்தவளாக வேங்கை மர நிழலிலே நின்ற பத்தினி ஒருத்திக்கு தேவ அரசனுக்கு வெண்டிய சிலர் வந்து அவள் காதல் கணவனையும் காட்டி அவளையும் அழைத்துக் கொண்டு எங்கள் கண்காண விண்ணிலே போனார்கள். இது மிகவும் ஆச்சரியமானது."
இது இளங்கோவடிகளுக்கு மலைக்குறவர் சொன்ன செய்தி! இதை இலக்கியம் என்று நோக்காது அறிவியல் உணர்வோடு பார்த்தால் வேற்றுக்கிரகத்தவர்களால் ஒரு மானுடப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாள். இது பறக்கும் தட்டு விவகாரத்துடன் சம்மந்தப்பட்டதாகவே தெரிகின்றது.

இவ்வாறாகப் பரந்து பட்ட வானியல் அறிவு நிரம்ப இருந்தும் தமிழர்கள் பிரகாசிக்கவில்லை! பிரகாசிக்க வேண்டும் என்று அக்கறைப்படவுமில்லை!

ஆனாலும் நாசா போன்ற அமைப்புக்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக தமது விண்வெளி ஓடங்களில் தமிழையும் எழுதி அனுப்புகிறார்கள் என்று எங்கேயோ படித்ததாக ஞாபகம். அது உண்மையாக இருந்தால், அதன் மூலம் ஏதாவது ஆதாயம் கிடைத்தாலும் அதன் அறுவடையில் சங்கத் தமிழரின் பங்கும் இருக்கத்தான் செய்யும். அது முழுத் தமிழ் இனத்துக்கும் பெருமை தேடித் தரவும் கூடும். அப்போது நிச்சயம் ஒருநாள் சங்க இலக்கியங்கள் அனைத்தும் விஞ்ஞானிகளால் தேடி படிக்கப்படும் என்பது உண்மை.

பண்டைய தமிழனின் அரும்பெருஞ்சாதனை காலநீட்டிப்புக் கணிதம்..!


செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டு கூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர் .

பண்டைய வானவியலி

ல் ஒரு நாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர் . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இ
ருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள் 24*60=1440 ஆகும் .

வருடத்தின் சில நாட்களில் பகல் நீண்டு இருக்கும் சில நாட்களில் இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைகோள் உதவியில்லாமலும் தொலைக்காட்சிகளின் துணையுமில்லாமலும் 12 மாதங்களையும் பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும் எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டு கூறியுள்ளனர் ஆகவே தமிழன்தான் பகல் – இரவு நீட்டிப்பு அறிவியலை முதன் முதலில் உலகிற்கு கூறினான்.

சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்

“ சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு
ஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும் – ஐப்பசிக்குப்
பின்னைந்து மாதம் பிசகாமல் இரவேறும்
மின்னே விடுபூ முடி “


சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் – இரவு நாழிகைகள் சமமாக( பகல்=30, இரவு =30 ) இருக்கும்
ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல் நீடிக்கும்
ஐப்பசிக்கு பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்கு பின் உள்ள கார்த்திகை , மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில் இரவு நீடிக்கும்
பாடலின் கடைசி வரி " விடுபூ முடி " மிக மிக முக்கியமான வரியாகும் இந்த வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது இந்த வாக்கிய கணித முறை தான் சோதிடவியலுக்கு அடிப்படையானதாகும்.

வாக்கிய கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும்

பகல் நீட்டிப்பை காண
வி - டு - பூ – மு – டி எனும் ஐந்து வார்தைகளை எடுத்துக்கொள்வோம் வி என்பது வைகாசி
டு என்பது ஆனி
பூ என்பது ஆடி
மு என்பது ஆவணி
டி என்பது புரட்டாசி
இது போலவே வி - டு - பூ – மு – டி எனும் அதே ஐந்து வார்தைகளை கொண்டு இரவு நீட்டிப்பு மாதங்களுக்கு கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம்
மாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறை
வி என்ற எழுத்தின் தொடக்கம் வ ஆகும் எனவே
வ = 1/4 நாழிகை
வா= 1/4 நாழிகை
வி=1/4 நாழிகை ஆக மொத்தம் கிடைப்பது ¾ நாழிகை பகல் நீடிக்கும் 3/4 நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம்

இது போல வி - டு - பூ – மு – டி ஆகிய வாக்கியங்களின் முதல் எழுத்து முதல் கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது

பகல் நீட்டிப்பு
வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்

இரவு நீடிப்பு
கார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம்
மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்

இளநீர் மகிமையும் தென்னையின் பெருமையும்

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தரும் கொல்லென வேண்டா—நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால் ( வாக்குண்டாம் )
பொருள்: தென்னை மரம் நிலத்திலிருந்து குடித்த தண்ணீரை சுவையுடைய இளநீராக தலை வழியாகத் தருதல் போல, ஒருவர்க்கு உதவி செய்தால் தருணம் வரும்போது மிகுதியாகத் திருப்பிச் செய்வார். ஆகையால் ஒருவர்க்குச் செய்த உதவி எப்போது திருப்பிக் கிடைக்கும் என்று எண்ணத் தேவையே இல்லை.
இந்த அருமையான கருத்தை 1500 ஆண்டுகளுக்கு முன் வடமொழியில் நீதிசதகம் (ஸ்லோகம் : ப்ரதம வயசி ப்லுதம் தோயம்------) எழுதிய பர்த்ருஹரி என்ற புகழ்மிகு கவிஞனும் அழகாகப் பாடிவிட்டான்:
பொருள்: மரம் நட்ட சில ஆண்டுகளுக்கு மட்டுமே நீர் பாய்ச்சுகிறோம். அதற்கு நன்றிக் கடனாக வாழ் நாள் முழுதும் தன் தலையில் பெரிய பாரத்தைச் சுமந்து கொண்டு சுவையான இளநீரைத் தருகிறது தென்னை.
தென்னை மரத்துக்கும் இளநீருக்கும் இப்படி அறிமுகம் தேவை இல்லை. தேங்காய் என்பது கோவில்களிலும் பூஜைகளிலும் உணவிலும் தவிர்க்க முடியாத ஒன்று. இலை முதல் நார் வரை எல்லா பகுதிகளும் பயன் படுவதால் இந்த மரத்தை கற்பக விருட்சமாகக் கருதுவோரும் உண்டு.
தமிழ்நாட்டில் திருத் தெங்கூர், வட குரங்காடு துறை முதலிய கோவில்களில் தல விருட்சமாக விளங்குகிறது. சித்த, ஆயுர்வேத வைத்தியத்தில் தேங்காய் எண்ணை முதல் மரத்தின் பல பகுதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. கள், சர்க்கரை, கயிறு, கூடை, விசிறி, கட்டில், உத்தரம் என எல்லாம் தந்து மனிதனின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து விட்டது.
இளநீர் சூட்டைத் தவிர்க்கும் என்பது உலகறிந்த உண்மை. கோடை காலம் வந்து விட்டால் சாலை ஓரம் முழுதும் மலை போலக் குவித்து, பொழுது சாயும் வரை விறுவிறுப்பாக விற்கின்றனர். இதெல்லாம் பழைய கதை.

Picture : Coconut tree in Hawai

புதிய கதை என்னவென்றால் இதை அட்டை டப்பாவில் ( carton) அடைத்து ஜூஸ் போல அமெரிக்கவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் விற்கத் துவங்கி விட்டார்கள். இதன் காரணமாக இதற்கு புது கிராக்கி வந்துவிட்டது. கோகோஸ் ந்யூசிபெரா (cocos nucifera) என்ற தாவரவியல் பெயருடன் உலகின் பெரும்பாலான கடற்கரைகளை அழகுபடுத்தும் மரம் இது.

வெளிநாடுகளில் ஒரு பொருளை விற்கவேண்டும் என்றால் அதன் எடை, அது தயாரிக்கப்பட்ட நாள், எத்தனை நாள் வரை அதைப் பயன்படுத்தலாம், அதில் என்ன என்ன சத்துக்கள் எவ்வளவு இருக்கின்றன என்று எல்லா வற்றையும் எழுத வேண்டும். இப்படி எழுதிய உடனே இளநீருக்கு புது “மவுசு” வந்து விட்டது.

இளநீரில் பொட்டாசியம் மக்னிசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், தாமிர, கந்தக, இரும்புச் சத்து, வைட்டமின்கள் உண்டு. வாழைப்பழத்தைப் போல இரண்டு மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. கொழுப்புச் சத்து அறவே இல்லை. சர்க்கரைச் சத்தோ ஆரஞ்சு பழரசம் போன்ற பழ ரசங்களை விட மிகக் குறைவு. வயிற்றிலுள்ள புழுக்களைக் கொல்லும். சிறு நீரகத்தைப் பாதுகாக்கும். சில வகை புரதச் சத்து பசும்பாலை விட அதிகம் கொண்டது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை யாருக்கும் கொடுக்கலாம். சிறு நீரக, குடல் தொற்று நோய்கள், வயிற்றுப் போக்கு எல்லாவற்றுக்கும் மருந்தும் ஆகும்.

இளநீரில் உள்ள வேதிப் பொருட்களின் அளவு


மொத்த திடப்பொருள்                                               6.5 %
குளுக்கோஸ், பிராக்டோஸ்                                  4.4 %
தாதுப்பொருட்கள்                                                       0.6 %
புரதச்சத்து                                                                     0.01 %
கொழுப்புச்சத்து                                                          0.01 %
அமிலத்தன்மை ணீஏ                                                 4.5 %
பொட்டாசியம்  ட்ஞ்                                                290.0 %
சோடியம்  ட்ஞ்                                                            42.0 %
கால்சியம்  ட்ஞ்                                                           44.0 %
மக்னீசியம் ட்ஞ்                                                           10.0 %
பாஸ்பரஸ்  ட்ஞ்                                                            9.2 %
இரும்புச்சத்து  ட்ஞ்                                                  106.0 %
காப்பர்  ட்ஞ்                                                                   26.0 %

(ஆதாரம்  - சத்தியவாணி கிருஷ்ணன்குட்டி 1987)

100 கிராம் இளநீரில் கொடுக்கும் கலோரி
அளவு 17.4

இளநீரின் இயல்புகள்

·     இனிப்புச் சுவை நிறைந்தது. 

·     குளுமை தரக்கூடியது.

·     எளிதில் ஜீரணமாகக்கூடியது.

·    பித்த வாதத்தை குணப்படுத்தும் தன்மையுடையது.

·     பசியைத் தூண்டக்கூடியது

·     நீர்ப்பெருக்கியாக செயல்படக்கூடியது.

·     புத்துணர்வு தரக்கூடியது.

·     உடல் வெப்பத்தைத் தணிக்கக்கூடியது.

·     உடலில் உள்ள நீர்ச்சத்துக் குறையைப் போக்கும் தன்மை கொண்டது.

இளநீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்

வெப்ப நாடுகளில் வாழ்பவர்களின் உடல் நிலை அதன் தன்மைக்கேற்ப அமையும்.  மாறுபட்டால் உடலில் பித்த நீர் அதிகரித்து, உடல் அதிக உஷ்ணமாகும்.  இதனால் உஷ்ண சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படும்.  இவை நீங்க தினமும் இளநீர் அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.  கண்கள் குளிர்ச்சி பெறும்.  வயிற்று நோய்கள் அகலும்.

வயிற்றில் வாயுவின் சீற்றம் மிகுந்து அவை வயிற்றின் உட்புறச் சுவர்களை தாக்கி புண்களை ஏற்படுத்தும்.  நீண்ட பட்டினி, அதிக உணவு, உடலுக்கு ஒவ்வாத உணவு இவற்றால் ஏற்படும் அஜீரணக் கோளாறு அனைத்தையும் தீர்க்கும் குணம் இளநீருக்கு உண்டு.

இளநீர் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.  இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீர்களை நீக்கும்.  இரத்தச் சோகையைப் போக்குகிறது. 

இரத்தக் கொதிப்பைக் குறைக்கும் சக்தி இளநீருக்கு உண்டு.  அதனால் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.

குழந்தைகளுக்கு கொடுத்தால் இதிலுள்ள சத்துக்கள் எலும்புகளுக்கும், உறுப்புகளுக்கும் வலுகொடுக்கும்.  உடல் வளர்ச்சி சீராக இருக்கும்.  குழந்தைகளுக்கு உண்டாகும்  நோய்களைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

அம்மை நோயின் தாக்கம் கண்டவர்கள் இளநீர் அருந்தினால் நோயின் வீரியம் குறையும். நாவறட்சி, தொண்டைவலி நீங்கும்.

சிறுநீர் பெருக்கியாகவும், சிறுநீரகம் சீராக இயங்கவும், இளநீர் உதவுகிறது.  சிறுநீரக கல்லடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

மூளைக்கு புத்துணர்வும், நரம்புகளுக்கு வலுவும் ஏற்படுத்துகிறது.  நினைவாற்றல் தூண்டப்படுகிறது.

மது பழக்கம் உள்ளவர்களின் கல்லீரல் அதிகம் பாதிப்படையும்.  அதனை சீர் படுத்தும் குணம் இளநீருக்கு உண்டு.

இரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதால் இருதயம் சீராக செயல்படும்.  இதய வால்வுகளை பலப் படுத்தும்.  தினமும் இளநீர் அருந்தி வந்தால் இதய நோய் ஏதும் அணுகாது.

பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் அடிவயிறு வலிக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.

டைபாய்டு, மஞ்சள் காமாலை நோயின் தாக்குதல் கொண்டவர்கள் இளநீர் அருந்தினால் உடல் விரைவாகத் தேறும்.

இளநீரில் சுண்ணாம்புச்சத்து நிறைந்திருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் உதவுகிறது.

தேன் கலந்து அருந்தினால் தாது விருத்தியாகி ஆண்மை சக்தியை பெருக்கும்.

இந்திய மருத்துவ முறையில் இளநீர் பெரும்பங்கு வகிக்கிறது.

இளநீர் ஒரு சிறந்த டானிக்காக வயதானவர்களுக்கும் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் பயன்படுகிறது. 

கர்ப்பிணிப் பெண்களுக்கு இது ஒரு அருமருந்து.  இளநீர் தினமும் அருந்தினால் உடல் வலுப்பெறும். மலச்சிக்கல் தீரும்.

அடிக்கடி இளநீர் பருகி  நீண்டநாள் ஆரோக்கியம் பெற்று வாழ்க.

தென்னை 5, 6 ஆண்டுகளில் பலன் தரும். பனை மரமோ பலன் தர 30 ஆண்டுகள் ஆகும்.